வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது முழுவதும் முடங்கிப்போனதால் புதுச்சேரியின் பாரம்பரிய மான நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வாழ் வாதாரத்தை இழந்துள்ளனர்.
புதுச்சேரியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் உள்ளது. முத்தியால்பேட்டை, கதிர் காமம், பெத்துசெட்டிப்பேட்டை, சண்முகாபுரம், லாஸ்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் காலங் காலமாய் நெசவுத் தொழிலையே நம்பி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட நெசவாளர்கள் உள்ளனர்.
இந்த பகுதியில் உற்பத்தி செய் யப்படும் கைலி, துண்டு, சேலை, படுக்கை விரிப்பு, தலையணை உறை போன்றவை உள்ளூர் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.
புதுசசேரி கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் என்ற பெயரில் இயங்கி வரும் இந்நிறுவனம், கடந்த 4 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நெசவுக் கூடங்களில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தறிகள் உற்பத்தியின்றி வீணாகி வருகின்றன. இதேபோல் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனி நபர்களின் தறிகளும் தற்போது பணியில்லாமல் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக நெசவாளர் சங்கத்தலைவர் செல்வராஜ் கூறிய தாவது:
கைத்தறி தொழிலைப் பாது காக்க புதுச்சேரி அரசானது, புதுச் சேரி கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்துக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை நெசவாளர்களைச் சென்ற டையாமல், ஊழியர்களின் சம்பளத் திற்கே போதுமானதாக இருந்தது. இதனால் இந்நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளது என்றார்.
நெசவுத்தொழிலில் 25 ஆண்டு களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் பாஸ்கர் கூறுகையில், “புதுச்சேரி யில் ஒவ்வொரு முறையும் ஆட் சிக்கு வருபவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கைத்தறி நெசவு நிறுவனத்தில் வேலை கொடுப்பதால் அதிகப்படியான ஆட்களுக்கு சம்பளம் கொடுத்தே இந்நிறுவனத்தின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறார்.
இதுதொடர்பாக கைத்தறி நெச வாளர் ராமலிங்கம் கூறுகையில், “பண்டிகை காலங்களில் அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச கைலி, சேலை போன் றவை இந்நிறுவனம் மூலம் கொள் முதல் செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொள்முதலை அரசு நிறுத்தியதால் நெசவுத் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது” என்கிறார்.
நெசவுத் தொழிலாளி பூரணி கூறுகையில், “கடந்த 30 ஆண்டு களாக கூட்டுறவு கைத்தறி நிறுவ னத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பணியாற்றி வரு கிறேன். ஆனால், எங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை” என கவலையுடன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, நலி வடைந்த நிறுவனங்களை மேம் படுத்த திட்டங்கள் தயாரிக்க துறை தலைவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெசவாளர்களை மேம் படுத்தும் புதிய திட்டங்கள் விரை வில் அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago