கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நகைக் கடன் தள்ளுபடியில் ரூ.4,900 கோடி வரை கொடுத்துவிட்டோம். மீதமுள்ள ரூ.100 கோடிக்கான தள்ளுபடிக்கு, மனுக்களைப் பரிசீலித்து, பயனாளிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்படுகிறது. விரைவாக அவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படும்.

தமிழகத்தில் 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2,756 கோடி தள்ளுபடி வழங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 10-க்குள் கடன் தள்ளுபடி ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,88,309 உறுப்பினர்கள் பயனடைவர்.

தமிழகத்தில் உள்ள பண்டக சாலைகளை நவீனப்படுத்தி, லாபத்தில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2,000 சங்கங்களை பலவகை சேவைப்பிரிவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, 400 சங்கங்கள் மாற்றப்பட்டுள் ளன.

கூட்டுறவுத் துறை மருந்துக் கடைகளில் 20 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. மேலும், குறைந்த விலையில்மருந்து வழங்கும் வகையில் ‘டான்பெட்’ மூலம் மருந்து கொள் முதல் செய்யப்படுகிறது.

கோழி, ஆடு, மீன் வளர்ப்போருக்குஇதுவரை 1.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.589 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளை இணைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம். 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கூட்டுறவுத் துறை சார்பில் திண்டுக்கல்லில் புதிய கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் காலியாகஉள்ள 4,403 விற்பனையாளர்கள், எடையாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை முடித்து, ஜனவரியில் பணியாணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2 கிலோ, 5 கிலோ சமையல் காஸ்

தள்ளுவண்டி வியாபாரிகள்,வெளி மாநிலத் தொழிலாளர்களுக்காக கூட்டுறவுத் துறை சார்பில் 2 கிலோ, 5 கிலோ சமையல் காஸ்விற்பனை அக். 6-ம் தேதி சென்னையில் தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் 780-க்கும் மேற்பட்டகூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்