சமூக நலன் கருதி பல தொண்டுகளை செய்திருக்கிறது பிஎஃப்ஐ: வைகோ

By என்.சன்னாசி

மதுரை: “மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வெள்ள பாதிப்பு காலங்களிலும், தீ விபத்து பகுதிகளிலும் தொண்டாற்றி இருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலளர் வைகோ தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது, வெள்ள பாதிப்பு காலங்களிலும், தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலன் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா. ஆனால், சில இடங்களில் நடந்த வன்முறையை காரணம் காட்டப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும். மேலும், தமிழக முதல்வர் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையிலே நடவடிக்கைகள் எடுத்து சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதி இல்லை'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்