கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த மருத்துவர்களை போராட வைப்பது அவமானம்: தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: "கரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா?" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்கவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி அரசாணை 354-ன் கீழ் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை (Pay Scale) 4-ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையில் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்