தமிழகத்தில் மதவாத சக்திகள் ஒருபோதும் காலூன்ற முடியாது: வைகோ 

By செய்திப்பிரிவு

சென்னை: " தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. காவல் துறை டிஜிபி அறிக்கை கொடுத்தது மட்டுமின்றி, காவல் துறை மிகத் திறமையாக செயல்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து வருகின்றனர்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழ்நாடு மிக அருமையாக முதல்வர் ஸ்டாலினால் வழிநடத்திச் செல்லப்படுகிறது. இதற்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. காவல் துறை டிஜிபி அறிக்கை கொடுத்தது மட்டுமின்றி, காவல்துறை மிகத் திறமையாக செயல்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து வருகின்றனர்" என்றார்.

ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முடியுமா என்று முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்