நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21% வரை உயர்த்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம் 16 % இருக்க வேண்டும் என்று தமிழக அரசு விவசாயிகளை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது.

தற்போது பெய்யும் மழையினால் நெல்லின் ஈரப்பதம் 20 லிருந்து 25 சதவீதம் வரை உள்ளது. இத்தகைய எதிர்பாராத இயற்கை பாதிப்புகளின்போது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 21% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போதும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் திமுக அரசு நடந்துகொள்வது சரியானதல்ல.

எனவே, முதல்வர் இப்பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21 % வரை உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்