நவராத்திரி, தீபாவளியை முன் னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாம்பரம் - நாகர்கோவில் அதி விரைவு சிறப்பு ரயில் (06001) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
» பெட்ரோல் குண்டுவீச்சுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்: சமஸ்கிருத பாரதி தமிழக, கேரள பொறுப்பாளர் உறுதி
நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அக்டோபர் 25-ல் இயக்கப்பட இருக்கும் நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040) சாத்தூர் தவிர மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago