கன்னியாகுமரி கடற்கரையில் கடைகள் அமைக்க கடும் போட்டி: பிற மாநில வியாபாரிகள் குமரியில் குவிந்தனர்

By எல்.மோகன்

கன்னியாகுமரி சீஸனுக்காக திரிவேணி சங்கம கடற்கரை வளகத் தில் நடைபாதை கடைகள் அமைக் கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கடை அமைப்பதற்கு பிற மாநில வியாபாரிகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ரூ. 1.50 கோடி வருவாய்

கன்னியாகுமரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் காலமாக சபரிமலை சீஸன் உள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ள சபரிமலை சீஸனுக்காக பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்ட தற்காலிக கடைகள் ஏலம் மூலம் வருவாய், ரூ. 1 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது. இரண்டாம் கட்ட சீஸன் கடைகள் ஏலம் நாளை நடைபெறுகிறது.

இதுபோல், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பின்புறம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரிவேணி சங்கம கடற்கரை வளாகத்திலும் திறந்தவெளி கடைகள் அமைக்கப்படுகின்றன. சீஸனை முன்னிட்டு இங்கு கடைகள் அமைக்க வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர். விற்பனைக்காக துணி வகைகள், கலைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.

நிற்கவும் இடமில்லை

ஏற்கெனவே சாதாரண நாட்களிலும் இங்கு திறந்தவெளி கடைகள் செயல்பட்டு வந்தாலும், தற்போது சுற்றுலா பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாதவாறு சீஸன் கடைகள் ஆக்கிரமித்து வருகின்றன. மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், பீகார், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களைடச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.

ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிகமானோர் கூடும் முக்கடல் சங்கமம் பகுதியில், ஆண்டுதோறும் சீஸன் நேரத்தில் சூரிய உதயத்தை முறையாக பார்வையிட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தரைவாடகை மட்டும் பெற்றுக்கொண்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நிர்வாகம் தற்காலிக கடைகளுக்கான அனுமதி வழங்கி வருகிறது. ஆனால் பலர் மேற்கூரைகள் அமைப்பதால் திரிவேணி சங்கமத்தின் இயற்கை அழகு பாதிக்கப்படுவதுடன், சூரிய உதயத்தையும் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் அமைக்கும் வியாபாரிகள் கூடும்போது; சீஸனை முன்னிட்டு இரு மாதங்கள் சிறப்பான வியாபாரம் இருக்கும் என நம்பியே... பிற மாநிலங்களில் இருந்து கடைகள் வைத்துள்ளோம். இவற்றில் அதிக அளவு வியாபாரம் நடைபெறும் பகுதியாக முக்கடல் சங்கம கடற்கரை வளாக பகுதி உள்ளது. கடும் வெயில் மற்றும் மழையை பொருட்படுத்தாது திறந்தவெளி கடைகளில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால், சூரிய உதயத்தை பார்ப்பதற்கு இடையூறு உள்ளதாக கூறி கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு இடையூறு செய்யும் வகையிலோ, சூரிய உதயத்தை பார்ப்பதற்கு இடையூறாகவோ நாங்கள் நடக்கவில்லை. ஒரு சிலர் விதிவிலக்காக இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுவதாக இருக்கலாம். அதற்காக அனைத்து வியாபாரிகளையும் குறைசொல்ல முடியாது” என்றனர்.

அதே நேரம், ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் நடந்துகூட செல்ல முடியாத வகையில், தரைத்தளம் அனைத்திலும் கடைவிரிக்கும் செயலை பகவதியம்மன் கோயில் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. இதனால் சூரிய உதயம் காணவும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடவும் பாதிப்பு ஏற்படும் என பக்தர்கள் தெரிவித்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்