சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.26) நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறுது. இந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள சட்ட மசோதாக்களுக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களின் நிலை, அதுதொடர்பான விவரங்கள் குறித்தும், கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
» இந்தியா குறித்து பாரபட்சமான பதிவு: அமெரிக்க ஊடகங்களை விமர்சித்த அமைச்சர் ஜெய்சங்கர்
» ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு | சகோதரனின் நினைவிடத்தில் தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசை எதிர்த்த சகோதரி
நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும் இன்னும் உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago