பெரம்பலூர் அருகே நிலமாக மாறிய கடல் பகுதியின் தொன்மையை பாதுகாக்க வேண்டும்: புவியியலாளர்கள் வலியுறுத்தல்

By அ.சாதிக் பாட்சா

பெரம்பலூர் அருகே கடலாக இருந்து நிலமாக மாறிய பகுதியை அதன் புவியியல் தொன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என புவியியலாளர்கள், சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களின் சில பகுதிகள் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து பின்னர் நிலப்பகுதியாக மாறியதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் பூமி யில் புதைந்து கிடக்கும் ஏராள மான படிமங்களே இதற்கு சாட்சி யாக உள்ளன. இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பின்வரும் சந்ததி யினர் கண்டு உணர வாய்ப்பளிக் காமல், இந்த நிலங்களில் உள்ள கனிமங்களைப் பல தனியார் நிறு வனங்கள் சூறையாடி வருகின்றன.

இந்நிலையில், அப்படி சூறை யாடப்படாத சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி பெரம் பலூரில் கவனிப்பாரற்று கிடக் கிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரை, கொளக்காநத்தம், அயனா வரம் ஆகிய கிராமங்களை உள்ள டக்கிய இந்தப் பகுதியை இந்திய புவியியல் ஆய்வு மையம் கற்றுலா (கல்வி கற்கும் நோக்கத்துடன் செல்லும் பயணம்) மையமாக ஆக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என புவியி யலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, புவியியல் ஆய்வு வல்லுநராக பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் கடலூர் மாவட் டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த நீலகண்டன் கூறியபோது, “அமெரிக் காவின் அரிசோனா மாகாணத்துக்கு அடுத்தபடியாக கடலாக இருந்து நிலமாக மாறிய மிகப்பெரும் தொன்மை வாய்ந்த பகுதி பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. இந்த நிலப்பகுதியின் வயது சுமார் 11 கோடி ஆண்டுகள் இருக்கலாம். கார்பன் கதிரியக்க முறைமூலம் இந்த வயது கணிக் கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள சாத்தனூர் கல்மரத் தின் வயது 12 கோடி ஆண்டுகள் என அறிவியலாளர்கள் கதிரியக்க கார்பன் முறை மூலம் கணித்துள் ளனர். புவியியல் கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் இப்பகுதி ஒரு புனிதமான இடமாகக் கருதப் படுகிறது. புவியியல் கல்வி பயிலும் மாணவர்கள் நாடு முழுவதும் இருந்து இங்கு வந்து கண்டு, உணர்ந்து ஆய்வு செய்வதுடன் ஆதாரங்களைச் சேகரித்துச் செல்கின்றனர்.

நீலகண்டன், ரமேஷ் கருப்பையா

இங்கு சுமார் ஆயிரம் வகை யான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருப்பதாகக் கூறப்படு கிறது. ஆனால், அவற்றில் சுமார் 200 வகை உயிரினங்களின் படிமங்களே கண்டறியப்பட்டுள்ளன. தொன்மை வாய்ந்த இந்த நிலப்பகுதி பாது காக்கப்பட வேண்டும். இப்பகுதி யில் அகழாய்வு செய்து, இங்கு வாழ்ந்து மடிந்து படிமம் ஆன கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விரிவான தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா கூறியபோது, “கடலாக இருந்து நிலமாக மாறிய மிகப்பெரிய பகுதியை இப்பகுதி மக்கள் அழிக்காமல், உருமாற்றாமல் வைத்துள்ளனர். இவற்றைப் பாதுகாப்பது நமது கடமை. இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த ஆண்டு இப்ப குதியை பாதுகாக்கப்பட்ட தொன் மைப் பகுதியாக அறிவித்துள்ளது. எனினும், இந்தப் பகுதியை பாது காக்க இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுமார் 11 கோடி ஆண்டு தொன்மை வாய்ந்த இப்பகுதியை இந்திய புவியியல் ஆய்வு மையம் தனது முழு கட்டுப்பாட்டில் எடுத் துக்கொண்டு, இங்கு ஒரு கற்றுலா மையம் உருவாக்க வேண்டும். இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட உயிரி னங்கள், தாவரங்களின் மாதிரிகள், படிமங்கள் ஆகியவற்றைக் காட்சிப் படுத்தும் மியூசியம், உலகம் மற்றும் உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து விளக்கும் ஒளிப்படக் கூடம், குறுகியகால பயிற்சி வகுப்பு நடத்துதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்