திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க திமுகவில் பறக்கும் படை: ஆளும் கட்சியினரை கண்காணிக்க புது ஏற்பாடு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆளும்கட்சியினரின் பணம், பரிசு ப்பொருட்கள் பட்டுவாடாவை தடுக்க, திமுகவில் பறக்கும் படை அமைக்க புது ஏற்பாடு செய்துள்ளனர்.

பணம் பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிக்கும், காலியாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான், வெற்றி பெற முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்த வரலாற்றை மாற்றியமைக்க திமுகவினர், நினைக்கின்றனர். ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் அதிமுகவினரிடம் முன்பிருந்த தேர்தல் ஆரவாரம், உற்சாகம் தற்போது இல்லை. இதை சாத கமாகப் பயன்படுத்தி திமுகவினர், இந்த 3 தொகுதிகளிலும் வெற்றி பெற தேவையான தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளனர். அதற்காக, இந்த 3 தொகுதிகளிலும், ஆளும்கட்சியை சமாளிக்கவும், தேர்தல் செலவுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் வசதி படைத்த வேட்பாளர்களையே திமுக முன்நிறுத்தியுள்ளது.

ஆளும்கட்சியான அதிமுக வெற்றியை அவ்வளவு எளி தாக விட்டுக்கொடுக்காது என்பதால் 3 தொகுதிகளிலும் தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களை கவர பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகத்துக்கு பஞ்சம் இருக்காது எனக்கூறப்படுகிறது.

ஆனால் இதைத் தடுக்க 3 தொகுதிகளிலும் பறக்கும்ப டையினர் திமுக, அதிமுக கட்சிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரு கின்றனர். அரசியல் கட்சியினர் எந்தெந்த வழிமுறைகளை தேர்ந்தெடுந்தாலும் அந்த வழி களை கண்டுபிடித்து தடுக்க பறக்கும் படையினர், கிராமம், கிராமமாக அவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். பரிசுப்பொருட்களுக்காக மொத்தமாக பேன்சி ஸ்டோர், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர், பர்னிச்சர் கடைகள், ஜவுளிக் கடை களில் கொள்முதல் செய்வோர் கண்காணிக்கப் படுகின்றனர்.

குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி மட்டுமில்லாது இந்த தொகுதிக்கு பக்கத்து தொகு திகள், மதுரை நகரப்பகுதி திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்த நிறுவனங்கள், கடைகள் மற்றும் அவர்கள் வீடுகளும் கண்காணிக்கப்படுகிறது. ஆனால், ஆளும்கட்சியினருக்கு சாதகமாகத்தான் தேர்தல் அதிகாரிகள் இதையெல்லாம் செய்கிறார்கள் என திமுகவினர் நினைக்கின்றனர். அதனால், பணப் பட்டுவாடாவை தடுக்க அதிகாரிகளை நம்பாமல் கட்சி நிர்வாகிகளை கொண்டு தனி பறக்கும் படைகளை அமைத்து புது ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், கார்களில் தொகு தியின் நாலாபுறம் சென்று ஆளும்கட்சியினரை, இந்த குழுவினர் கண்காணிப்பார்கள். திமுகவின் பறக்கும் படை களுக்கு தகவல் அளிக்க அக்கட்சியில் ஒவ்வொரு பூத் வாரியாக இன்பார்மர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளும்கட்சியினர் பணப் பட்டு வாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்தால் அவ ற்றை பிடித்துகொடுப்பது, அதிகாரிகளுக்கு தகவல் அளிப் பது, சரியான நடவடிக்கை எடுக்கா தபட்சத்தில் திமுக இணையதள நிர்வாகிகள் மூலம், மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பேக்ஸ், மெயில் மூலம் புகார் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்