சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன
இந்த படிப்புகளுக்கு 2022 - 23 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றவர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி மாலை 5 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago