உதகை: கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி.முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராகினர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி, ‘‘இப்போது வரை கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் 316 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், பலரிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளதால், கூடுதல் அவகாசம் வேண்டும்’’என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.முருகன்,விசாரணையை அக்.28-க்குதள்ளிவைத்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது,‘‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான, விபத்தில் உயிரிழந்த கனகராஜ், 16 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார். அதில், 6 சிம் கார்டுகள் அவரது பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் 516 தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago