மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3.54 லட்சம் அபராதம்: சாலைகளில் சுற்றித்திரிந்ததால் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள்மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் கூடுதலாக 10 நபர்களை நியமித்துக் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த 14-ம் தேதி முதல் கடந்த 20-ம் தேதி வரைமொத்தம் 229 மாடுகள்பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.3,54,950 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும். பொது வெளியில் திரிய விடக்கூடாது. மீறி மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டுக் காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்