அருப்புக்கோட்டையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உயிரிழந்த இளைஞர் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் மர்மமாக உயிரிழந்த இளைஞரின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோர் பெற்றுக்கொண்டனர். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரில் செப்.13-ல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (34) என்பவரை மக்கள் பிடித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸில் ஒப்படைத்தனர். தங்கப்பாண்டியன் மனநலம் பாதித் தவர் என்பதால் காப்பகத்தில் சேர்த்த போலீஸார், பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணைக்குப் பின் மீண்டும் காப்பத்தில் விட்டனர்.

இதில் உடல்நிலை பாதித்த தங்கப்பாண்டியன் அரசு மருத்துவமனையில் செப்.14-ல் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் உயிரிழந்தாக குடும்பத் தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தங்கப்பாண்டியன் உடல் விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப் பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்துஇசக்கி முன்னிலையில் செப்.17-ல் பிரேதப் பரிசோதனை செய் யப்பட்டது.

ஆனால், பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உடலைப் பெற்றுக் கொள்வோம் எனக் கூறி குடும் பத்தினர் உடலை வாங்க மறுத்தனர். மேலும், தங்கப்பாண்டியன் இறப்புக்கு உரிய நிவாரணம் வேண்டும், உயிரிழப்புக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்கப்பாண்டியன் மனைவி கோகில வாணிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையே, உயிரிழந்த தங்கப் பாண்டியின் தந்தை தங்கமாரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தங்கப்பாண்டியனின் உடலில் 11 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு அவை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

போலீஸார் சட்டவிரோதமாக எனது மகனை காவலில் வைத்து தாக்கியுள்ளனர். இதனால் எனது மகன் இறந்துள்ளார். மகன் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், என அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில், வழக்கு ஏற்கெனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கப்பாண்டியனின் உடலை பெற்றோர் வாங்காமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தங்கமாரி, தனது மகன் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும், தவறினால் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வது போல் போலீஸார் அடக்கம் செய் யலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக் கப்பட்டிருந்த தங்கப்பாண்டியனின் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று பெற்றுக்கொண்டனர்.

இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டி ருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்