சிவகாசி மாநகராட்சிக்கு சுகாதார அலுவலர் உள்ளிட்ட 30 பணியிடங்கள் ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிக்கு 8 உதவி ஆணையர்கள், 8 கண்காணிப்பாளர்கள், நகர் சுகாதார அலுவலர், 11 உதவி பொறியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய பணி யிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு அக்டோபரில் சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. அப்போது இணை இயக்குநர் நிலையில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால், மற்ற பொறுப்புகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மாறாக சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளில் பணியாற்றிய அலுவலர்களே மாநகராட்சிக்குரிய பொறுப்புகளை கூடுதலாக கவனித்து வந்தனர்.

மேலும் கடைநிலை அலுவலர் முதல் அதிகாரிகள் வரை கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படாமல், நகராட்சி பணியாளர்களை கொண்டே, கடந்த ஓராண்டாக மாநகராட்சி நிர்வாகம் நடைபெற்று வந்தது. இதில் விருதுநகர் நகராட்சி பொறியாளருக்கு சிவகாசி மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. சமீபத்தில் நியமிக்கப்பட்ட கணக் காளரிடம் மேலாளர் பொறுப்பு கூடு தலாக வழங்கப்பட்டது. பணியாளர் பற்றாக்குறை மற்றும் வேலைப்பளு, பொறுப்புக்கான நிலையில் உள்ள அதிகாரிகளை நியமிக்காதது உள் ளிட்ட காரணங்களால் வரி வசூல், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, புதிய சொத்து வரி மதிப்பீடு, சுகாதாரப் பணிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களால் வளர்ச்சிப் பணிகள் முடங்கியதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஏற்கெனவே செய்தி வெளி யாகி இருந்தது.

இந்நிலையில் சிவகாசி மாநகராட் சியில் 4 மண்டலத்துக்கு தலா ஓர் உதவி ஆணையர், பொது கணக்கு, பொறியியல், சுகாதாரம், நகரமைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கு தலா ஒரு உதவி ஆணையர் பதவியில் செயற்பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். முதுநிலை மருத்துவர் நிலையில் நகர சுகாதார அலுவலர் பணியிடமும் அதன் கீழ் எட்டு சுகாதார ஆய்வாளர்கள் பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளன. மண்டலம் மற்றும் துறைக்கு ஒருவர் என இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் நிலையில் 8 கண்காணிப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது மூன்றாக உள்ள உதவி பொறியாளர்கள் எண் ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர், வருவாய் ஆய்வாளர், நகரமைப்பு ஆய்வாளர், அலுவலக பணியி டங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் இப் பொறுப்புக்குரிய அதிகாரிகள் நியமிக்கப்பட இருப்ப தாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அக்டோபர் 21-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதற்குள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களில் அதற்கான நிலையில் உள்ள அதிகாரிகளை நியமித்து, சிவகாசி நகரில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்