திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.,யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரி, ஜெகத்ரட்சகன் தாக்கல் மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்