கிராமங்களில் மின் வாரியத்துக்கு தொடர்பில்லாத வெளியாட்கள் பலர் மின்கம்பங்களில் ஏறி பழுதை சரி செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் ஏற்படும் பழுது களை களப்பணி பிரிவைச் சேர்ந்த ஹெல்பர், வயர்மேன் ஆகியோர் சரி செய்கின்றனர். ஒவ்வொரு மின் வாரிய அலுவலகத்தின் கீழ் குறைந்தது 12 கிராமங்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கு தலா 6 ஹெல்பர், வயர்மேன்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பல்வேறு மின்வாரிய அலுவலகங்களில் ஒன்றிரண்டு களப்பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
களப்பணியாளர்கள் பற்றாக்குறையை பயன்படுத்தி பல்வேறு கிராமங்களில் தனிநபர்கள் மின் கம்பங்களில் ஏறி மின் பழுதுகளை சரி செய்கின்றனர்.
சிலர் கம்புகளை எடுத்து மின் கம்பங்களில் உள்ள இணைப்பு களில் ஓங்கி அடிப்பது, சிலர் கம்பங்களில் மேல் ஏறி இணைப்பை சரிசெய்வது போன்ற வேலைகளை செய்கி்ன்றனர். இதுபோன்ற பழுதுகளை நீக்குவதற்கு முன்பு மின்மாற்றியில் மின்சாரத்தை ஆப் செய்து விட்டு பழுது நீக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தனிநபர்கள் மின் மாற்றியை ஆப் செய்யாமல் நேரடியாக மின் கம்பங்களில் ஏறி வேலை செய்வதால் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் வீட்டு நிகழ்ச்சிகள், திருவிழாக்களின்போது மின்கம்பங்களில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளில் கொக்கி போட்டு நேரடியாக மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மின் அழுத்தம் குறைந்து மின் சாதனங்கள் பழுதடைகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் மதுரை மண்டல தலைவர் சசாங்கன் தி இந்துவிடம் கூறியதாவது:
தமிழக மின்வாரியத்தில் களப்பணி பிரிவில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களி்ல் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிராமப்பகுதியில் இப்பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. எந்த மின்வாரிய அலுவலகங்களிலும் களப்பணி பிரிவில் முழுமையான அளவில் ஊழியர்கள் இல்லை. களப்பணி பிரிவில் யாராவது ஓய்வு பெற்றால், அந்தப்பணியிடம் உடனடியாக நிரப்பப்படுவதில்லை.
அண்ணாநகர் மின்வாரிய அலுவலகத்தில் களப்பணி பிரிவில் இருவர் மட்டுமே உள்ளனர். ஒருவர் விடுமுறையில் சென்றால் மற்றொருவர் 15 ஆயிரம் இணைப்புகளையும் பராமரிக்க வேண்டும். அவர்கள் ஓய்வில்லாமல் உழைக்கின்றனர்.
இதனால் கிராமங்களில் மின் கம்பிகளை கண்காணித்தல், பராமரித்தல் பணியை மேற்கொள் வதில் சிரமங்கள் உள்ளன. வீட்டு மின் இணைப்புளை சரி செய்தல், மின்மாற்றி பழுது நீக்குதல், மரங்களை வெட்டுதல் போன்ற பணிகளுக்கு வாடகைக்கு ஆள்களை வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க முடியவில்லை.
மின் கம்பங்கள், மின் மாற்றி களில் பழுதுகளை சரி செய்யும் பணியை அதற்கான பயிற்சி பெற்ற மின்வாரிய களப் பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும். மின்வாரியத்தின் அனுமதியில்லாமல் தனிநபர்கள் இப்பணியை மேற்கொள்வது சட்டவிரோதம். மின்சாரம் திருடப்பட்டால் மின் திருட்டு தடுப்புக் குழு உள்ளது. அந்தக் குழுவிடம் புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago