சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 4328 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளுக்கு ரூ.13,610, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு 1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 170 இடங்கள் உள்ளன. இதில் சேரும் மாணவர்களுக்கு ரூ.11,610 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் நிர்ணயம் குழு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்கள் இன்று (22ம் தேதி ) முதல் 3 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago