தமிழக மகளிர் குழுக்கள், புதிய தொழில்முனைவோரை அரசு மின் சந்தை தளத்தில் இணைக்க முயற்சி

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் 'அரசு மின் சந்தை' தளத்தில் அதிக அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், புதிய தொழில்முனைவோர் ஆகியோரை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 'அரசு மின்சந்தை' தளம் சார்பில், விற்பனையாளர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னை சாஸ்திரி பவனில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன் பேசியதாவது:

நாட்டின் கடைக்கோடியில் உள்ள வாடிக்கையாளரையும், விற்பனையாளர்களையும் இணைக்க 'அரசு மின் சந்தை' தளம் (Government e Marketplace-GeM) என்ற https://gem.gov.in/ இணையதளம், கடந்த 2016-ம்ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதற்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவகையான பொருட்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் ஓர் உற்பத்தியாளர் தனது பொருளை பதிவு செய்தால், அதை இந்தியா முழுவதும் வாங்கக்கூடிய வாய்ப்பை இந்த இணையதளம் வழங்குகிறது.

மகளிர் சுயஉதவிக் குழு: இந்த இணையதளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், புதியதொழில் முனைவோர் ஆகியோரை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்மூலம் அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது எளிதாகும்.

4,027 பேர் மட்டுமே வணிகம்: தமிழக உற்பத்தியாளர்கள் இந்த இணையதளம் மூலம், கடந்த 7 ஆண்டுகளில் ரூ.7,403 கோடி மதிப்பில் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

1 லட்சத்து95 ஆயிரம் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இருந்து 65,755 உற்பத்தியாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் 4 ஆயிரத்து 27 பேர் மட்டுமே தொடர்ந்து வணிகம் செய்து வருகின்றனர். இது மேலும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குநர் அண்ணாதுரை, ‘அரசு மின் சந்தை' தளத்தின் துணை தலைமை இயக்குநர் ஏ.வி.முரளிதரன், தமிழ்நாடு பிரிவு அதிகாரி ரமேஷ் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்