பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் குவிந்துள்ள தேவைக்கு அதிகமான பணத்துக்கு கடன் பத்திரங்களை வெளியிட தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி நேற்று ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடிக்கான கடன் பத்திரங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வங்கிகளில் தேவைக்கு அதிகமான பணம் வார கணக்கில் முடங்கி இருப்பது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரி கே.சுந்தரேசன் கடந்த வாரம் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தேவைக்கு அதிகமாக வங்கிகளில் தேங்கிக் கிடக்கும் பணத்தை ரிசர்வ் வங்கி பெற்றுக்கொண்டு அதற்கு நிகரான கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னது போலவே, நேற்று மாலையிலிருந்து வங்கிகளின் அதிக கையிருப்பு பணத்தை பெற்றுக்கொண்டு கடன் பத்திரங்களை வழங்க ஆரம்பித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதற்காக நேற்று மாலை நடத்தப்பட்ட ஏலத்தில் முறையே 3 லட்சம் கோடிக்கு கடன் பத்திரங்கள் வழங்க அறிவிப்பு கொடுக்கப்பட்டது. முதலாவதாக நடந்த ஏலத்தில் ரூ.2,79,900 கோடிக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் ரூ 1,99,998 கோடிக்கு மட்டும் பத்திரங்கள் ஏலமுறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இரண்டாவதாக நடந்த ஏலத்தில் ஒரு லட்சம் கோடிக்கான பத்திரங்களை வெளியிட அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அதைவிட கூடுதலாக, ரூ.1,20,470 கோடிக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன. முடிவில், இதில் ஒரு லட்சம் கோடிக்கான பத்திரங்கள் ஏலமுறையில் ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு ஏலத்துக்குமான ஆண்டு ரெபோ வட்டி விகிதம் 6.26 சதவீதம். வங்கிகளில் கையிருப்பு அதிகமாக இருக்கும்போது அவற்றை ஒருநாள் மட்டும் வைத்திருந்து திரும்பப் பெறுவது என்ற ஒப்பந்தத்துடன் இதுபோல கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது உண்டு. இந்த ஒரு நாளைக்கான வட்டியை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago