பொங்கல் இலவச சேலை உற்பத்தியில் நெசவாளர்கள் மும்முரம்: 65 சதவீதம் பணிகள் நிறைவு

By ஆர்.செளந்தர்

பொங்கல் இலவச சேலை உற்பத்தியில் நெசவாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஜக்கம் பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி களில் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் ஜவுளிகடைகளுக்கும், தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக 700-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் இலவச சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இந்த ஆண்டு பொங்கல் பண்டி கைக்காக பெடல் தறியில் 1.44 லட்சம் சேலைகளும், கைத்தறியில் 47ஆயிரம் சேலைகளும் என மொத்தம் 1.91 லட்சம் சேலை கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இப் பணி தொடங்கப்பட்டது. இது வரை 65 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.

இது தொடர்பாக ஜக்கம்பட்டி நெசவாளர் எம்.சரஸ்வதி கூறும் போது, “சேலைகள் உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். விரைவில் 100 சதவீதம் இலக்கை எட்டி விடுவோம்” என்றார்.

காவி உடை உற்பத்தியில் ஆர்வம்

நாளை கார்த்திகை மாதம் பிறப்பதால் ஏராளமானோர் சபரிமலை ஐயப்பன் மற்றும் பழனி முருகன் கோயிலுக்கு காவி உடை அணிந்து விரதம் இருப்பர். இதனால் காவி வேட்டி மற்றும் காவி துண்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்ட மொத்த, சில்லறை வியாபாரிகள் காவி உடைகளை வாங்கி செல்ல ஆண்டிபட்டி பகுதியில் முகா மிட்டுள்ளனர். வருவாய் அதிகமாக கிடைப்பதால் நெசவாளர்கள் பலர் தற்போது காவி உடைகள் உற்பத்தி செய்யும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்