சென்னை: தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி இரா.முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்த அவர், சேடப்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பெரியகுளம் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவரது மறைவு இந்திய நாட்டிற்கும், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இந்தத் துயரமான நேரத்தில், அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago