சென்னை: மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் சார்ஜிங் நிலையங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு இம்மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் சார்ஜிங் நிலையங்களுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, சார்ஜிங் நிலையங்களில் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை சார்ஜிங் செய்யும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» மருத்துவ சிகிச்சை முறைகளை பரிமாறிக் கொள்ள தமிழகம் - மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை யூனிட்டுக்கு ரூ.8-ம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரூ.12-ம், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரூ.8-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு சார்ஜிங் நிலையங்களை நடத்தி வருபவர்கள் மற்றும் மின்சார வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, ‘‘மத்திய அரசு மின்சார வாகனங்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, மக்கள் பலர் மின்சார வாகனங்களை அதிகளவில் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மின்சார வாகனங்களை வாங்க நினைப்பவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார வாகனங்களின் விற்பனை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்’’ என்றனர்.
அதிகாலை 5 முதல் 10 மணி வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ரூ.8-ம், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை ரூ.10-ம், மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ரூ.12-ம், இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை ரூ.8-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago