சார்ஜாவுக்கு ஏற்றுமதியாகும் மதுரை கொய்யா: இயற்கை விவசாயத்தில் முத்திரை பதிக்கும் விவசாயி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

விவசாய நிலங்களில் ரசாயன உரங் களைத் தொடர்ந்து இடுவதால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, மண்ணில் அடங்கியுள்ள நன்மை தரும் சத்துகள், நுண்ணுயிரிகள் படிப்படியாக அழிந்துவிடும் அபா யம் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதனால், இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களுக்கு உள்ளூரில் மட்டு மல்லாது கடல் கடந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அப்படி இயற்கை முறையில் விளைவிக்கப் படும் கொய்யா பழங்களை சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்து, மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், இயற்கை விவசாயத்தில் முத்திரை பதித்து வருகிறார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா(63). இவர், ஆரம்பத்தில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இயற்கை விவ சாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, மேலூர் அருகே கட்டையன்பட்டியில் வானம் பார்த்த பூமியாக கிடந்த, தனது பூர்வீக இடமான 20 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி, தற்போது அதில் கொய்யா சாகுபடி மேற் கொண்டுள்ளார்.

அதுவும், துளிகூட ரசாயன உரம் கலப்பின்றி கால்நடைகளின் சாணம், வெல்லம், வெண்ணெய், கோமியம், பாசிப் பயறு உள் ளிட்டவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து தயாரித்த பஞ்ச கவ்யம் என்னும் இயற்கை உரத்தைக் கொண்டே கொய்யாக்களை சாகுபடி செய்துள்ளார்.

ஆரம்பத்தில் கொய்யா மரங்களில் அறுவடை செய்யப்படும் பழங்களை, உள்ளூரிலேயே விற் பனை செய்தார். ஆனால், மக் களிடம் வரவேற்பு இருந்தும், வியா பாரிகள், வழக்கமான விலைக்குக் கேட்டுள்ளனர். அதனால், தற்போது சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்கிறார். அங்கு ஒரு கிலோ கொய்யாவுக்கு 2 டாலர் விலை கிடைப்பதால், தற்போது காய்கறிகளையும் இயற்கை முறையில் விளைவித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

இதுகுறித்து விவசாயி சுப் பையா கூறியதாவது: இயற்கை விவசாயத்துக்காகவே என்னுடைய தோட்டத்தில் 60 மாடுகளை வளர்த்து வருகிறேன். அந்த கால்நடைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பஞ்ச கவ்யத்தையே மண்ணுக்கும், மரங்களுக்கும் உரமாக இடுகிறேன். இது தவிர அக்னி அஸ்திரம், புகையிலை, வெள்ளைப்பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை கோமியத் தில் கலந்து ஊற வைத்து, ஒரு வாரம் கழித்து வடிகட்டி தண்ணீரில் கலந்து கொய்யா மரங்களுக்குச் சொட்டுநீர் பாசனம் மூலம் அளிக் கிறேன். இது நேரடியாக குளுக் கோஸ் போல மரங்களை சென்றடை கிறது. 3 ஜி எனப்படும் அக்னி அஸ்திரம், புகையிலை, வெள்ளைப் பூண்டு போன்றவை கொய்யா வில் ஏற்படும் பூச்சி தாக்குதலைத் தடுத்து, மரத்தின் வளர்ச்சிக்கு வேகம் கொடுக்கும்.

கொய்யாவுக்குப் பொதுவாக இரண்டு சீஸன் உண்டு. இதில் டிசம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் கார்த்திகை சீஸன்தான் முக்கியம். மரங்களில் பறிக்கப்படும் கொய்யாக்களை முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என தரம்வாரியாக பிரித்து விற்பனை செய்கிறேன். முதல் தரம் பழங்கள் 280 கிராம் முதல் 500 கிராம் வரை இருக்கும். இந்த பழங்களைத்தான் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்கிறேன் என்றார்.

இயற்கை முறையில் சாகுபடி செய்து அறுவடையான கொய்யா பழங்கள்.

இயற்கையை விரும்பும் இந்தியர்கள்

சுப்பையா மேலும் கூறும்போது, “சார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்படும் நம் ஊர் பழங்கள், காய்கறிகள் என்றால் அலாதி பிரியம். எங்களிடம் 2 டாலர் விலைக்கு எடுக்கும் வியாபாரிகள், ஒரு கிலோ கொய்யாவை சார்ஜாவில் 4 முதல் 5 டாலர் விலைக்கு விற்கிறார்கள். ஆனால், அதே கொய்யா பழங்கள் இங்கு கிலோ 40 ரூபாய் முதல் அதிகபட்சம் 60 ரூபாய்க்குத்தான் கிடைக்கிறது. ஆனால், செயற்கை உரத்தைக்கொண்டு உற்பத்தி செய்வதைவிட இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கொய்யாவில் மூன்றில் ஒரு பங்கு பழங்களே கிடைக்கும். கார்த்திகை சீஸன் என்றால், ஏக்கருக்கு 6 டன் பழங்கள் கிடைக்கும். ஆனி, ஆடி, ஆவணி சீஸனில் 4 டன் பழங்கள் மட்டுமே கிடைக்கும்” என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்