சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 64 சதவீதம் (8 ஆயிரத்து 566 மில்லியன் கன அடி) நீர் இருப்பு உள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்குச் சீரான குடிநீர் விநியோகிக்க முடியும்.
இது தொடர்பாகச் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான வீராணம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை,புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி ஆகும். தற்போது, 8 ஆயிரத்து 566 மில்லியன் கன அடி குடிநீர் இருப்பில் உள்ளது. இது 64.79 சதவீதமாகும். இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்கு, மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும். சென்னை மக்களுக்கு தற்போது ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 1,030 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியில் ரூ.10 கோடிசெலவில் நீர்வளத் துறையால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணித் துறையின் நீரியல் மற்றும் நீர் நிலையியல் மையத்துக்கு நீர் வழங்குவதற்கான 2 கிணற்று மதகு பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கான மறு சீரமைப்பு கட்டுமானம் தற்பொழுது 50 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளது. இப்பணிகள் காரணமாகக் கிருஷ்ணா நதிநீர் திட்டத்திலிருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் பூண்டி ஏரிக்குச் சீரான குடிநீர் வந்தடையும். வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரைச் சேமிப்பதற்கு இந்த கட்டுமானப் பணிகள் தடையாக இருக்காது. மேலும், சோழவரம் ஏரிக்குபூண்டி ஏரியின் உபரிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர் வரும் வடகிழக்குப் பருவமழை மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் கிருஷ்ணா நதிநீர் பங்களிப்பு திட்டம் வாயிலாக 4 டிஎம்சி தண்ணீர் சென்னைகுடிநீர் வாரியத்துக்குக் கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சென்னைமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு, இருப்பில் உள்ள குடிநீரைக் கொண்டுதொடர்ந்து எந்தவித தடையுமின்றி சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர்வழங்க இயலும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago