சென்னை: மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அழைத்துச் செல்லப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள்,மியான்மர் நாட்டின் மியாவாடி நகரில் சில கும்பலால் கொத்தடிமைபணிக்கு நிர்பந்தித்து, சித்ரவதை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், சித்ரவதைக்கு உள்ளான தமிழர்களை மியான்மரில் இருந்து மீட்டு தமிழகம் அழைத்து வரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், மியான்மர் நாட்டின் மியாவாடி நகரில் அடைத்துசித்ரவதை செய்யப்படும் செய்திஅவர்களின் குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.மியான்மரில் சிக்கித் தவிக்கும்தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைவழங்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஸ்ரீபெரும்புதூரில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்களை மியான்மருக்கு துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, மோசடியான சில வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்திஉள்ளனர். இதேபோல, பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்கவும், மியான்மரில் சிக்கியுள்ளவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியான்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை பெயரளவுக்கு மட்டுமல்லாமல் செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: மியான்மருக்கு கடத்தப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் போலி நிறுவனங்களும், சில முகவர்களும் லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கிக்கொண்டு, தமிழக இளைஞர்களை சிக்கலில் மாட்டிவிடுகின்றனர். அப்படிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முகவர்களை கட்டுப்படுத்தி, இனியும் இதுபோல நடக்காத வகையில் மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: தாய்லாந்து நாட்டில் வேலை வாய்ப்புஏற்படுத்தி தருவதாக கூறி, தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டில் மாஃபியா கும்பல்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கி உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய இளைஞர்களை பாதுகாப்புடன் மீட்பதோடு, இச்சம்பவத்துக்கு காரணமான தரகர்களையும், கடத்தல் கும்பல்களையும் கைது செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago