சென்னை: திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். திமுகவில் அமைப்பு ரீதியான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அடிப்படை அமைப்புகளுக்கான தேர்தல் முடிக்கப்பட்டு, மாவட்ட அளவிலான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர், துணை செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க பலரும் போட்டியிட தயாராகி வருகின்றனர். நீண்டகாலமாக மாவட்டச் செயலாளராக இருப்பவர்களும் இரு பதவிகளில் இருப்பவர்களும் இம்முறை இளைய தலைமுறைக்கு விட்டுத்தர வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலை அமைதியாக, போட்டியின்றி நடத்தி முடிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னரே அதிருப்தியாளர்களை அழைத்துப் பேசிசுமூக நிலை உருவாக்க வேண்டும். கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபடாத மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாற்றாக சமீபத்தில் சிறப்பாக பணியாற்றி வருவோரை நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சி உத்தரவையும் மீறி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்றுவெற்றி பெற்று, பதவி விலகாதவர்களுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கக்கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு மிக முக்கியமானது என்பதால், அதற்கு கடும் போட்டி நிலவுகிறது. தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் சென்னையில் முகாமிட்டு மீண்டும் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago