மதுரை: மதுரையில் தரை துடைக்கும் மாப் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேமதடைந்தன.
மதுரை மாவட்டம், எம்.கரிசல்குளம் அருகிலுள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், அவனியாபுரம் அருகே மதுரை - திருமங்கலம் நான்கு வழிச் சாலையில், தனியார் கல்லூரிக்கு செல்லும் சந்திப்பு பகுதியில் என்பிகே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இங்கு வீடு, வர்த்தக நிறுவனம், மருத்துவமனைகளுக்கான தரையை சுத்தம் செய்யும் மாப்புகள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கம் போல் நேற்று பணி முடிந்து தொழிற்சாலையை அடைத்துவிட்டு சென்றனர். மீண்டும் இன்று காலை தொழிற்சாலையை திறக்க வந்தபோது, உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.
இது பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனுப்பானடி, தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்கள் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், மாப்புகள் தயாரிக்க பயன்படுத்தும் நூல், பஞ்சு உள்ளிட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேமடைந்ததாக உரிமையாளர் ரவி தெரிவித்தார்.
» தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
» பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டு விதிமீறல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் விசாரிக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago