சென்னையில் செப்.25-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’யின் ‘யாதும் தமிழே’ விழா - 5 ஆளுமைகளுக்கு ‘தமிழ்த் திரு’ விருதுகள்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 10-ம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி ‘யாதும் தமிழே’ விழா செப்டம்பர் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், ‘தமிழை எதிர்காலத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பது எப்படி?’ என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் கலந்துரையாட உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய 5 ஆளுமைகளுக்கு இந்த விழாவில் ‘தமிழ்த் திரு’ விருது வழங்கப்பட உள்ளது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 2013 செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும், வாசகர் திருவிழாக்களும், ‘யாதும் தமிழே’ விழாவும் நடைபெற்றுவந்தன.

கரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் பொது நிகழ்ச்சிகள் இல்லாமல்போன நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வாசகர் திருவிழா, ‘யாதும் தமிழே’ ஆகிய விழாக்கள் நடைபெறவில்லை.

2 ஆண்டுகளுக்கு பிறகு..

இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 10-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தமிழைப் போற்றும் ‘யாதும் தமிழே’ விழா மீண்டும் உற்சாகமாக நடத்தப்பட உள்ளது.

சேப்பாக்கத்தில் விழா

சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் (தூர்தர்ஷன் கேந்திரா அருகே) செப்டம்பர் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த விழா நடைபெறும்.

இந்த நிகழ்வில், ‘தமிழை எதிர்காலத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பது எப்படி?’ என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் கலந்துரையாட உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய 5 ஆளுமைகளுக்கு ‘தமிழ்த் திரு’ விருது வழங்கப்பட இருப்பது, இந்த நிகழ்வுக்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்ப்பதாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்