தலைப்பு அதிர்ச்சியாக இருக் கிறதா? சரி, முதலில் உள்ளாட் சிக்கும் ‘உடான்ஸ்’-க்கும் என்ன சம்பந்தம்? பஞ்சாயத்து ராஜ்ஜி யத்துக்கும் உடான்ஸர்களுக்கும் என்ன தொடர்பு? காந்தியும், நேருவும், அம்பேத்கரும், காமராஜரும் வலம் வந்த அத்தியாயங்களில் உடான்ஸுக்கு என்ன வேலை? எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டுறவு அமைப்புகளின் பரிணாம வளர்ச்சியில் எங்கே வந்தது உடான்ஸ்? எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது நண்பர்களே!
பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் அடிப் படை அம்சங்களில் ஒன்றாக நேரு வலியுறுத்திய கூட்டுறவின் வரலாறு மிகவும் நெடியது. 17-ம் நூற் றாண்டின் இறுதிகளில் பிரான்ஸ் நாட்டின் சோஷியலிஸ்ட் சார்லஸ் பூரியல், இங்கிலாந்தின் ராபர்ட் ஓவன் மற்றும் டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்ததே கூட்டுறவு தத்துவம். கூட்டுறவு என்பது ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேட்ச்சையான தொழில் முயற்சி ஒழுங்கு அமைப்பாகும். தன்னிச் சையாக ஒன்றுகூடும் தனி நபர்களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்வதே கூட்டுறவின் நோக்கம்.
இன்றைக்கு உலக நாடுகள் பலவும் கூட்டுறவு அமைப்புகளை வெற்றி கரமாகச் செயல்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் கூட்டுறவு அமைப்புகள் ஆண்டுக்கு 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கு கின்றன. அமெரிக்கா உட்பட உலகளவில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்ட காலகட்டமான 2008-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் உள்ள 300 பெரிய கூட்டுறவுக் கழ கங்கள் 1.1 டிரில்லியன் டாலர் பணம் ஈட்டிக் கொடுத்தன. உலகில் சுமார் 26 லட்சம் கூட்டுறவு கழகங்கள் ஒரு கோடியே 26 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கிவரு கின்றன. ஜூலை 4-ம் தேதி உலக கூட்டுறவுக் கழக நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காந்தியடிகள் வலியுறுத்திய பசுமைப் பொருளாதாரமும் கூட்டு றவை அடிப்படையாகக் கொண்டதே. ஒரே கிராமத்தில் விவசாயம், கால் நடை, காய்கறிகள் பயிரிடுவது, மண்பாண்டங்கள், தச்சுத் தொழில் ஆகியவற்றை அவர் கூட்டுறவு முறையில் வலியுறுத்தினார். அவ ரது சபர்மதி ஆசிரமத்தில் இந்த முறையிலேயே பசுமை பொருளா தாரம் தழைத்தோங்கியது. காந்தியின் வழியைப் பின்பற்றியே பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் ஓர் அங்கமாக நேரு கூட்டுறவை வலியுறுத்தினார். கூட்டுறவு என்பது வணிகம் மட்டுமே அல்ல; அது ஒரு தத்துவம். அது ஒரு பொருளாதாரம். அது ஒரு அரசியல். அது ஒரு சமத்துவ தர்மம். இதனை உலக நாடுகள் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன.
ஜெர்மனியும் கியூபாவும் ஜெயித்த கதை!
இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இன்றும் கூட்டுறவு அமைப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேச நாடுகளின் பொருளாதார நெருக்கடியால் அழிவின் விளிம் புக்குச் சென்றது ஜெர்மனி. பசியும் பட்டினியும் மக்களை வாட்டியது. ஜெர்மனி மீண்டும் எழவே எழாது, அதனைத் துண்டாடி பங்குப் போட்டுக் கொள்ள துடித்தன போரில் வென்ற சில பெரிய நாடுகள். ஆனால், உலகமே வியக்கும்படி மீண்டு எழுந் தது ஜெர்மனி!
காரணம், ஜெர்மனியர்கள் தங் களது கூட்டுறவுத் தந்தையான ஃப்ரிடிரிக் வில்லிஹெம் ரைஃபிஸின் வழிக்குத் திரும்பினார்கள். 1847-ல் ஜெர்மனியில் வறுமையைப் போக்கு வதற்காக ரைஃபிஸின் ‘முதலுதவி’ என்கிற அமைப்பை நிறுவினார். 1864-ல் அவர் ’Heddesdorfer darlehnskassenverein’ என்கிற விவசாயி களுக்கும் ஏழைகளுக்கும் கடன் வழங்கும் சங்கத்தைத் தொடங்கினார். அதுவே ஜெர்மனியின் முதல் கூட்டு றவுச் சங்கம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அவரது வழியைப் பின்பற்றியது ஜெர்மனிய அரசுகள். நாட்டின் கடன் சுமையும் மக்களின் கடன் சுமையும் பெருமளவு கட்டுப் படுத்தப்பட்டன.
இதேபோலதான் கியூபாவும். அமெரிக்கா அளித்த அத்தனைப் பொருளாதார நெருக்கடிகளையும் தூள் தூளாக்கியது கியூபா. உலகையே ஆட்டம் காண வைத்த அமெரிக்காவால் கியூபாவை அசைக்க முடியவில்லை. அமெரிக்க ஆட்சி யாளர்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டினார்கள் கியூப விவசாயிகள். காரணம், கூட்டுறவு. ஒவ்வொரு கரும்பு விவசாயியையும் கூட்டுறவு மூலம் இணைத்தது கியூபா. இன்று கியூபாவில் விவசாயம் மட்டுமின்றி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியார் டாக்ஸிகள், ஹோட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்களைக் கூட்டுறவு அமைப்புகளே நடத்து கின்றன. கியூபாவின் கூட்டுறவு சுற்றுலா உலகளவில் பிரசித்தி பெற்றது.
இலங்கையின் கூட்டுறவு!
ஆங்கிலேயர் ஆட்சியில் இந் தியாவைப் போலவே கடுமை யாக சுரண்டப்பட்டது இலங்கை. பாரம்பரிய விவசாயம் அழிக்கப் பட்டது. விவசாயிகளிடம் இருந்த விளைநிலங்களைப் பறித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. வயல்வெளி களும், காய்கறி தோட்டங்களும் அழிக்கப்பட்டு அங்கு ரப்பர் தோட் டங்களும் தேயிலைத் தோட்டங் களும் உருவாக்கப்பட்டன. பாரம் பரிய விவசாயிகள் பரிதவித்துப் போனார்கள். அவர்கள் தோட்ட முதலாளிகளிடம் வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். கொத்தடிமைகள் ஆனார்கள். கொத்தடிமை முறை யில் இருந்து விவசாயிகளை விடு விப்பதற்காக 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘விவசாய வங்கி தொழில் குழு’ அமைக்கப்பட்டது.
1904-ல் இலங்கை விவசாய சங்கம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் தொடங் கப்பட்டது. தொடர்ந்து 1911-ல் 7-ம் இலக்க கூட்டுறவு சங்கங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் கீழ் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன. பின்பு ‘விவசாய திணைக்களம்’ என்கிற கூட்டுறவு கட்டுப்பாட்டு சபை தொடங்கப்பட்டது. 1913, 1914, 1929, 1942, 1945, 1946, 1958, 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றது இலங்கையின் கூட்டுறவு சட் டங்கள். இன்று இலங்கையில் கட லோடிகள் கூட்டுறவு சங்கம் தொடங்கி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வரை வெற்றிகரமாகச் செயல் படுகின்றன. ‘இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு’ மூலம் சுயசேவை கடைகள், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகள், கூட்டுறவு சிறு, பெரு நகர கடைகள் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வரு கிறது. மக்களிடையே கூட்டுறவு குறித்த விழிப்புணர்வு நுகர்வோர் கூட்டுறவு இயக்கம் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
‘குப்பூட்ஸும்’ கூட்டுறவுக் குழுக்கள்!
உலகிலேயே மிக வலிமையான அதி நவீன கூட்டுறவு அமைப்பு முறையைக் கொண்ட நாடு இஸ்ரேல். இஸ்ரேலின் அதி நவீன ராணுவ தளவாடங்களைத் தயாரிப்பதும் அதன் கூட்டுறவு அமைப்புகள்தான். இஸ்ரேலின் கூட்டுறவு, ‘குப்பூட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘குப்பூட்ஸ்’ என்கிற ஹிப்ரு வார்த் தைக்கு ஒருங்கிணைந்த அல்லது கொத்தான என்று பொருள். பல்வேறு சமூகக் குழுக்கள் கொண்ட தொகுப்பை ‘குப்பூட்ஸும்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் உறுப் பினர்கள் ‘குப்பூட்டீஸிக்’ என்ற ழைக்கப்படுகின்றனர்.
இஸ்ரேலின் முதல் ‘குப்பூட்ஸும்’ கூட்டுறவு குழு 1909-ல் தொடங்கப் பட்டது. ஆரம்பத்தில் பாரம்பரிய விவசாயத்தில் கவனம் செலுத்திய இந்தக் கூட்டுறவுக் குழுக்கள் படிப்படியாக நவீன வடிவம் பூண்டன. சமீபத்தைய ஆண்டுகளில் ஏராளமான ‘குப்பூட்ஸும்’ கூட்டுறவுக் குழுக்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அங்கே சுமார் 300 கூட்டுறவுக் குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன் றும் மிகப் பெரியவை. கடந்த 2010-ல் இஸ்ரேலின் தொழில் துறை மற்றும் மற்றும் விவசாயத் துறையில் எட்டு பில்லியன் டாலர்களை ஈட்டிக் கொடுத்துள்ளன ‘குப்பூட்ஸும்’ கூட்டுறவுக் குழுக்கள். இது நாட் டின் மொத்த வளர்ச்சியில் 9 %. 40 % விவசாயம் ‘குப்பூட்ஸும்’ கூட்டுறவு குழுக்களால் மட்டுமே நடத்தப் படுகிறது. இதன் மதிப்பு 1.7 பில்லியன் டாலர்கள். சில ‘குப்பூட்ஸும்’ கூட்டுறவுக் குழுக்கள் உலகின் அதி நவீன ராணுவ தளவாடங்களைத் தயாரிக்கின்றன. 2010-ம் ஆண்டு அங்கே ‘குப்பூட்ஸ் சாசா’ என்கிற 200 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு றவுக் குழு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மட்டும் ஈட்டிய வருவாய் 850 மில்லியன் டாலர்கள்.
கற்பனைச் சமூகம் ‘உடோப்பியா’!
இஸ்ரேலின் ‘குப்பூட்ஸ்’ கூட்டுறவு அமைப்புகளை அவர் கள் ‘உடோப்பியா’ (Utopia) சமூகங் கள் என்று பெருமையாக அழைக் கிறார்கள். ‘உடோப்பியா’ சமூகம் என்பது ஒரு கற்பனையான சமூகம். உலகின் அத்தனை வகையான மனிதர்களுக்கும் அங்கே இடம் உண்டு. சமத்துவவாதிகள், முதலாளித் துவவாதிகள், சர்வாதிகாரி கள், ஜனநாயகவாதிகள், அராஜக வாதிகள், பெண்ணியவாதிகள், ஆணாதிக்கவாதிகள், சுற்றுச் சூழலியாளர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், இனவாதிகள், இடதுசாரி கள், வலதுசாரிகள், சீர்திருத்த வாதிகள், தனிக் குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்கள், ஓரின ஈர்ப்பாளர்கள் என அத்தனைப் பேரின் கருத்துகளையும் காது கொடுத்து கேட்கும் சமூகம் அது. அங்கே காவலர்கள் கிடையாது. திருடர்கள் கிடையாது. வீடுகளுக்கு பூட்டுகள் கிடையாது. உலகமே நம்ப முடியாத உன்னதங்களைக் கொண்டிருக்கும் அந்தச் சமூகம். இப்படியான ‘உடோப்பியா’என்கிற சொல்லில் இருந்து பிறந்ததே ‘உடான்ஸ்’. நான் சத்தியமாக உடான்ஸ் விடவில்லை நண்பர்களே!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago