சபரிமலையில் சிறப்பு ஏற்பாடு: ரூபாய் நோட்டு சிக்கலைத் தீர்க்க கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பிரசாதம்

By என்.சுவாமிநாதன்

மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு சிக்கலைத் தீர்க்கும் வகையில், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கூடுதல் ஏடிஎம் மையங்களும், கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பிரசாதம் வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளன.

மண்டல பூஜைக்காக கடந்த 15-ம் தேதி மாலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதியே திரளான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனைத் தரி சித்தனர். தொடர்ந்து மிக அதிக அளவில் கூட்டம் வருகிறது.

மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுடன் பலர் வருகின்றனர். சில்லறை தட்டுப்பாடு பிரச்சினையால் அவர்கள் தவிப்பதைத் தடுக்கும் வகையில், கேரள மாநில தேவசம் போர்டும், தனலெட்சுமி வங்கிக் கிளையும் முன்னேற்பாடு பணி களைச் செய்துள்ளன.

சபரிமலையில் சன்னிதானத்தி லும், பம்பையிலும் உள்ள தன லெட்சுமி வங்கிக் கிளைகளில், ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தைக் காட்டி, பக்தர்கள் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஏற்கெனவே பணம் எடுக்கும் அளவை தாண்டியிருக்கக் கூடாது.

இதேபோல் சன்னிதானத்தில் தனலெட்சுமி வங்கியின் 3 ஏடிஎம்கள், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் வங்கியின் ஒரு ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள் ளன. இவற்றில் தேவையான பணம் அவ்வப்போது இருப்பு வைக்கப்படுகிறது. அப்பம், அரவணை பிரசாதங்கள் வழங்கும் இடத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பிரசாதம் பெற முடியும். சபரிமலை உண்டியலில் மதிப்பு நீக்கப்பட்ட பணத்தாள்களைப் பக்தர்கள் செலுத்தலாம்.

கேரள அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சபரிமலைக்கு பக்தர்கள் வருகை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இது போன்ற மாற்று ஏற்பாடுகளால் இப்போதைக்கு சூழலைச் சமாளித்துள்ளோம். இனி கூட்டம் அதிகமாக இருக்கும். அதற்காக, தனலெட்சுமி வங்கி தரப்பில் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் 20 இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் வழியில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் போதிய அளவு பணம் இருப்பு வைக்க அனைத்து வங்கிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன” என்றார்.

தனலெட்சுமி வங்கி தரப்பில் கேட்டபோது, “எங்கள் வங்கியில் தான் சபரிமலை தேவஸ்தான வங்கிக் கணக்கு உள்ளது. பக் தர்களின் காணிக்கைப் பணம், எங்கள் வங்கிக்கே வருவதால் சில்லறை வழங்குவதிலும் சிரமம் இல்லை. இப்பணியில் தினசரி 140 பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்” என்றனர்.

பிரசாதம் விலை உயர்வு

கடந்த ஆண்டு ஒரு பாக்கெட் அப்பம் விலை ரூ.25 ஆக இருந்தது. இப்போது ரூ.35 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.60-க்கு விற்கப்பட்ட அரவணை, இந்த ஆண்டு ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்