சென்னை: பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மின் கட்டண உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்: "மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மின் கட்டணம் உயர்ந்தால் விலைவாசி உயர்ந்துவிடும். அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வதால், மக்கள் பாதிக்கப்படுவர். ஆனால், கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறுகிறார்.
மின் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைவு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் விலைவாசி உயரும்.
சொத்து வரி, மின் கட்டணம், ஆவின் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள்தான் நீதிபதிகள். அரசு சரியாக செயல்படுகிறதா இல்லையா என்பது குறித்து மக்கள் அறிவர். கஷ்டத்தில் உள்ள மக்களின் நிலை அறிந்த செயல்படாத இந்த அரசு ஒரு சர்வாதிகார அரசு" என்று அவர் கூறினார்.
» சிறுத்தை Vs சிவிங்கிப் புலி... வேறுபாடுகள் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை
» ‘குழந்தைகளுக்கு மிட்டாய் கிடையாது’ - தீண்டாமை கொடுமை விவகாரத்தில் தென்காசி கடைக்கு சீல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago