மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல் சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏழைகள் பல் வேர் சிகிச்சை, கேப் பொருத்துவது உள்ளிட்ட உயர் சிகிச்சை கிடைக்காமல் தவிப்பது தொடர்பான செய்தி ‘தி இந்து' வில் கடந்த ஆக. 28-ம் தேதி வெளியானது.
இதை அடிப்படையாக வைத்து மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
அரசு ராஜாஜி மருத்துவமனையின் பல் மருத்துவத் துறை பிரிவில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு முகத்தில் அடிபட்டு பல் சேதம் அடைந்து அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே சில முக்கிய சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக பல்லை பாதுகாப்பதற்கான சிகிச்சைகள் வழங்காமல் பல்லை அகற்றவே மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் பல் வேர் அறுவை சிகிச்சை, புல்லிங் சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ். நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு ராஜாஜி மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவு தலைவர் அனிதா நேரில் ஆஜரானார்.
அவர் நீதிபதிகளிடம் கூறும்போது, தமிழகத்தில் சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும், 25-க்கும் மேற்பட்ட தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. மதுரை அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ பிரிவு மட்டும் செயல்படுகிறது. 7 பல் மருத்துவர் பணியிடங்களில் 4 பேர் மட்டுமே பணிபுரிகி்ன்றனர். 6 படுக்கைகள் உள்ளன. அதில் 2 பெண் நோயாளிகளுக்கானது. இங்கு பல்வேர் சிகிச்சை நிபுணர் இல்லை. இருப்பினும் சிறிய அளவிலான பல் வேர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகிறது. சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டும் தான் உள்ளது. ஆனால் 25 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். தமிழகத்தின் மையப்பகுதி மதுரை. இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வருகின்றனர்.
உடல் உறுப்பில் பல் முக்கியமானது. பல்லில் பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும். தீவிர பல் நோயால் உயிரிழப்பு கூட ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொருவரும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளது. தாலுகா அளவில் முதலுதவி சிகிச்சை வசதிகளும், மாவட்ட அளவில் தீவிர சிகிச்சை வசதிகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றனர்.
அதற்கு அரசு வழக்கறிஞர் நிதிப்பற்றாக்குறை உள்ளது. மதுரையில் பல் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக அரசிடம் திட்டம் உள்ளது என்றார்.
அதற்கு பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் கடமை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அந்த கடமையில் இருந்து தப்ப முடியாது. பொது மருத்துவம் போல் பல் மருத்துவத்துக்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒவ்வொரு அரசு மருத்துவ மனையிலும் ஏற்படுத்த வேண்டும். சென்னையில் மட்டும் இருந்தால் போதாது. மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பல் மருத்துவத்துக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்.
இதற்காக அரசு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் நவ. 23-ல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பல் சிகிச்சைக்கு உரிய வசதிகளை செய்து தருவது தொடர்பாக குடும்ப நலத்துறை செயலர், அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ. 23-க்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago