சென்னை: அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரும், பழனிசாமி ஆதரவாளருமான ஆதிராஜாராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தமிழக முதல்வராகவும், ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
அதேநேரம், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். அப்போது, அவருடன் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஓபிஎஸ் தனக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தியுள்ளார். இதனால்,போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று டிஜிபிக்கு நான் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்பட்டும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும்.
» புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
» சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு: மாமல்லபுரம் அருகே பாதிரியார் கைது
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வெற்று குற்றச்சாட்டுகளை கூறி இனி வழக்கு தொடர்ந்தால், மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago