பறவைகள் என்றாலே வேடந்தாங் கல்தான் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்தும் வகையில் திருச்சி அருகேயுள்ள ஒரு குளத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளி நாட்டுப் பறவைகளின் வருகை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிராமம் கிளியூர். வெண்ணாற்றின் கரையில், கல்லணைக் கால்வாயையொட்டி உள்ளது இந்த கிராமம். இங்கு உள்ள கிளியூர் குளம் ‘ப’வடிவில் அமைந்துள்ளது. சீமைக் கருவேல மரங்களும் நிறைந்துள்ளன.
இங்கு தற்போது காட்டு வாத்து இனத்தைச் சேர்ந்த நீலச்சிறகு வாத்து (Garganey), ஆண்டிவாத்து (Northern Shoveler), கிளுவை (Common Teal) உட்பட ஐரோப்பாவில் இருந்து வலசை வந்துள்ள ஆயிரக்கணக்கான பறவைகள் குளம் முழுவதும் அமர்ந்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
ஒரு பகுதியில் இருந்து மற் றொரு பகுதிக்கு இரை, இனப் பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் பறவைகள் இடம்பெயர்தலை வலசை போதல் என்கிறோம். அந்த வகையில் ஐரோப்பாவில் இருந்து இந்த வகை பறவைகள் இங்கு வந்துள்ளன.
இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள் பாலாபாரதி மற்றும் தங்கமணி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பறவைகளிடம் உள்ள விநோத மான செயல்பாடுகளில் வலசை போதல் மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத் தில் பறவைகள் இடம்பெயர் கின்றன. இரை தேடல், இனப் பெருக்கம் ஆகியவற்றுக்காக ஏதுவான சூழலைத் தேடி இந்தப் பறவைகள் வலசை செல்கின்றன. தங்களது வசிப்பிடங்களில் குளிர்காலம் தொடங்கும்போது வெப்பமான இடங்களை நோக்கி அவை இடம்பெயர்கின்றன.
வலசை செல்வதற்கு சில வாரங் கள் முன்பு நிறைவு இரை உட்கொண்டு, அதைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக்கொண்டு, இதை ஆற்றலாக மாற்றி நீண்ட தூரம் பறக்கின்றன. ஆர்டிக் ஆலா போன்ற பறவைகள் ஒரே முயற்சி யில் செல்ல வேண்டிய 12 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவையும் கடக்க வல்லது. பறவைகள் ஆண்டுதோறும் மிகச்சரியாக ஒரே பகுதிக்கு வலசை வருகின்றன.
தற்போது பறவைகள் நிறைந் திருக்கும் கிளியூர் குளம் மாசடை யாமல் இருப்பது மகிழ்ச்சிதான். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை நாம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றனர்.
பறவைகள் தங்களது நலனுக் காக வலசை போனாலும் இதனால் மகரந்தச்சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுதல், விதைகளைப் பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர்ப் பெருக்கம் நிலைபெறு வதற்குக் காரணமாக அமைந் துள்ளன.எனவே, வலசை போகும் பாதைகள், நீர்நிலைகள், தங்கும் இடங்கள், வாழ்விடங்கள் போன்ற வற்றைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
கிளியூர் குளத்தைப் பறவைகள் சரணாலயமாக மாற்றுவது தொடர் பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago