தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

By செய்திப்பிரிவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர்களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.

ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ்

பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்) வழங்கி வருகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வெழுதிய மாதம், ஆண்டு ஆகிய விவரங் களை குறிப்பிட்டு யூஜிசி இணையதளத்தில் இருந்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், யூஜிசியைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

புதிய திட்டம்

தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம், தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் பேரும் தேர்ச்சி சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்று விடலாம். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்