சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க இந்த ஆண்டு முதல்புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது.
இடமாறுதல் பெற்றவர்களில் 90 முதல் 95 சத வீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்துவிட்டனர். அவர்களின் முழு விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின்போதுமருத்துவர்கள் பலர் பணி சூழ்நிலை கருதி மாற்றப்பட்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் பழைய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுவிட்டனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார். கலந்தாய்வு ஆன்லைனா அல்லது நேரடியாகவே என்பது குறித்து அறிவிக்கப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும், கல்விக்கான கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலந்தாய்வு
தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. அதாவது, சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடுகளுக்கு மட்டும் நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago