சென்னை: ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என்ற போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இன்றுமுதல் (செப்.12) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
வழக்கமாக ஒரு வட்டார போக்குவரத்து அலுவலக வரையறையின் கீழ் இருக்கும் ஓட்டுநர் பள்ளிக்குவாரத்தில் ஒருநாள் ஒதுக்கப்படும். அந்த நாளில் அந்தப் பள்ளிமாணவர்கள், பிற விண்ணப்பதாரர்களுடன் ஒட்டுநர், பழகுநர் உரிமத் தேர்வில் பங்கேற்பர்.
எடுத்துக்காட்டாக ஓர் அலுவலக வரையறையில் 30 ஓட்டுநர் பள்ளிகள் இருந்தால், குறிப்பிட்ட 6 பள்ளிக்கு ஒரு கிழமை வீதம், 30 பள்ளிக்கு வாரத்தின் 5 நாள்களும் பிரித்து வழங்கப்படும். அவ்வாறு தங்களுக்கான கிழமைகளில் மாணவர்களைத் தேர்வுக்கு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.
ஆனால் வாரத்தில் திங்கள், வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் பொதுமக்களையும் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் மட்டும் ஓட்டுநர் பள்ளியில் பயின்றோரையும் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டார்.
» அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்
» இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.முரளிதரன், செயலர் வைகை ஆர்.குமார் ஆகியோர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் எல்லைக்கு உள்பட்டு 15 முதல் 65 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஏற்கெனவே மோட்டார் வாகன ஆய்வாளர் பற்றாக்குறையால் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் தேர்வுநடத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில், ஆணையரின் உத்தரவால் செவ்வாய், புதன்ஆகிய 2 நாள்களும் நூற்றுக்கணக்கானோரை ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. அப்போதும் நேர பற்றாக்குறை காரணமாக தேர்வு நடத்தாமலேயே பெரும்பாலானோரை திருப்பி அனுப்புகின்றனர்.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயில்வோரும் பொதுமக்கள் தானே? பிறகு ஏன் இந்த பாகுபாடு?
இந்த உத்தரவு எங்கள் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் இன்று (செப்.12) முதல் பழகுநர், ஓட்டுநர் உரிமத் தேர்வை காலவரையின்றி புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையர் தனதுஉத்தரவை திரும்பப் பெற்று, பழைய நடைமுறையே கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பள்ளிகள் உள்ளன. இந்த வேலைநிறுத்தத்தால் ஓட்டுநர், பழகுநர் உரிமத் தேர்வுக்கான சுமார் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நாள்தோறும் நிலுவையில் வைக்கும் நிலை ஏற்படும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago