சென்னை: "சென்னை, திருச்சி, மதுரை மற்றும் உதகை, தமிழ்நாட்டில் இந்த 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது" என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து, இந்த "சென்னை ஓப்பன் (WTA) 250" போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதில் உலகின் 25 நாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்த ரூ.5 கோடியும், இங்குள்ள விளக்குகளை புதிதாக மாற்றி அமைப்பதற்காக ரூ.3 கோடியும், இந்த விளையாட்டு அரங்கை புதுப்பிப்பதற்காக ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் அனைத்து பணிகளும் நூறு சதவீதம் நிறைவுற்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளோம்.
நாளை முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளையும் உலகில் உள்ள பல நாடுகள் நேரடியாக பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பும் செய்ய தமிழக அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
» தொடரும் கரோனா உயிரிழப்புகள் - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்
» மத்திய அரசின் அழுத்தத்தால் மின் கட்டண உயர்வு: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
இந்த போட்டிகளை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.குறிப்பாக சென்னையில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த போட்டிகளை பார்வையிட உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிகளை கட்டணமின்றி பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை மற்றும் உதகை, தமிழ்நாட்டில் இந்த 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு அகாடமிக்கும் என்னென்ன தேவை என்பது குறித்தும், அகாடமி அமையவுள்ள அந்த பகுதி சார்ந்த விளையாட்டுகள் மட்டும் தேர்வு செய்து அந்த பகுதியில் விளையாட்டு அரங்கத்தை உருவாக்குவதுதான் நோக்கம். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago