சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று (செப்.11) 36-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல, 2 தவணை தடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதற்காக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 35 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், 36-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து, தடுப்பூசி போடப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
» ஆந்திர கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
» பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது
அதேபோல, 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் தவணை தடுப்பூசி தனியார்மையங்களில், கட்டணம் செலுத்திபோடப்பட்டு வந்தது. அதனால், பூஸ்டர் தவணை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்நிலையில், 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணைதடுப்பூசி வழங்கும் பணி, கடந்தஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த 75 நாட்கள் இலவச பூஸ்டர்தவணை தடுப்பூசி திட்டம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அனைவருக்கும் விரைவாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடுவதற்காக இந்த மாதத்தில்அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இம்முகாம்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளவும். செப்.30-க்குப்பின் 18 முதல் 59 வயது உள்ளவர்கள், தனியார் மையங்களில் ரூ.386 கட்டணம் செலுத்தி பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்களும், மெகா முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago