பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப். 12) தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக 120 நாட்களுக்கு முன் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பயணிக்க விரும்புவோர் நாளையும், ஜன. 11-ம் தேதி பயணிக்க விரும்புவோர் செப். 13-ம் தேதியும், ஜன. 12-ம் தேதி செல்ல விரும்புவோர் செப். 14-ம் தேதியும், ஜன. 13-ம் தேதி செல்ல விரும்புவோர் செப். 15-ம் தேதியும், ஜன. 14-ம் தேதி பயணிக்க விரும்புவோர் செப். 16-ம் தேதியும், பொங்கல் தினமான ஜன. 15-ம் தேதி செல்வோர் செப்.17-ம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். வடஇந்திய ரயில்களுக்கான முன்பதிவு 1 அல்லது 2 நாட்கள் மாறுதலுக்கு உட்பட்டது. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்