ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்ற தனிஷ்கா நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் திறனைநிரூபித்துள்ளனர். இத்தேர்வில் ஆலன் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இது தொடர்பாக ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்' தேர்வு இந்த ஆண்டு இந்தியா மற்றும் 14 வெளிநாடுகளில் 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.

இத்தேர்வை எழுத 18,72,343 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 17,64,571 பேர் தேர்வை எழுதினர். இதில் 9,93,069 பேர் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் எம்எஸ் உட்பட நாடு முழுவதும் அமைந்துள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 92 ஆயிரம் எம்பி பிஎஸ் இடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.

நீட் இளநிலை தேர்வில் தனிஷ்கா 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற் றுள்ளார். இவர் கோட்டா பகுதியில் உள்ள ஆலன் மையத்தில் பயிற்சி பெற்றவர்.

இவர் மட்டுமின்றி ஆஷிஷ்பத்ரா 2-ம் இடம், ஹிரு ஷிகேஷ் கங்குலி 3-ம் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆலனில் தொலைநிலைக் கல்வி கற்றவர்கள். மேலும் நீட் தேர்வு பட்டி யலில் முதல் 100 இடங்களில் ஆலன் மாணவ, மாணவிகள் 33 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆலன் சமர்த் வளாகத்தில் விழா நடைபெற்றது. இதில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற தனிஷ்கா, அன்கித் குமார், ராகவ் குப்தா, அனுத்மிஸ்ரா, அபிநவ் அகர்வால்,அனன்யா மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களை ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் இயக்குநர்கள் கோவிந்த் மஹேஷ்வரி, ராஜேஷ் மஹேஷ்வரி, நவீன் மஹேஷ்வரி, பிரிஜேஷ் மஹேஷ்வரி ஆகியோர் கவுரவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்