நாட்டில் நீதித்துறைக்கு தேவையான எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளே நியமனம்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

By செய்திப்பிரிவு

கோவை: நாட்டில் நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ளதமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சி மையத்தில் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம், ஓட்டுநர் ஓய்வு அறை கட்டிடத்தை நேற்று திறந்துவைத்த அவர், நிகழ்ச்சியில் பேசியதாவது:

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. இருப்பினும், மற்ற நீதிமன்றங்களை ஒப்பிடும்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறது. இங்கு புதிதாக தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கையைவிட, தீர்ப்பு வழங்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பல ஆண்டுகளாக வழக்குகளுக்கு தீர்வு காணப்படவில்லை யெனில் மக்கள் நீதித்துறையை குற்றம்சாட்டுவார்கள். வழக்கு விசாரணை நடைமுறை மட்டுமே இதற்கு காரணம் அல்ல. அதுதவிர பிற காரணங்களும் உள்ளன.

குறிப்பாக, நாட்டில் நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் ஒரு வழக்குக்கு தீர்வு காண பல ஆண்டுகள் ஆகிறது. நீதிபதிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்