திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயலை அடுத்துள்ள சோழபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (47). இவர் பாண்டேஸ்வரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
அமுதாவின் மகள் லக்ஷனா ஸ்வேதா(19), பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் பி.எஸ். மருத்துவப் படிப்பில் சேர்த்து, அப்படிப்பை வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் சமீபத்தில் படித்து முடித்தார். பிறகு, அவர், எம்பிபிஎஸ் படிக்க விரும்பியதால், கடந்த ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வு எழுதினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாக கூறப்படுகிறது. இதனால், மிகுந்தமன வருத்தத்தில் இருந்த அவர்நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதைப் பார்த்த அவரது தாய் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், லக்ஷனா ஸ்வேதா, மருத்துவமனைக்கு வரும் வழியிலேயேஉயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸார் விசாரித்து வருகின் றனர்.
உதவி எண்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, பொதுமக்கள் அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago