வேடந்தாங்கல் சரணாலய ஏரி சீரமைப்பு எப்போது?- வனத்துறைக்கு அனுமதி; நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கும் விவசாயிகள்

By கோ.கார்த்திக்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியின் கரைகள் மற்றும் மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளதை அடுத்து, இப்பணிக்கான திட்ட மதிப்பீட்டை அரசிடம் வனத்துறை சமர்ப்பித் துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்த கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந் தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப் பளவுள்ள ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சீசன் தொடங்கும். அப்போது, நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் இனப் பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன.

ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளுடன் மீண்டும் அவை தாயகம் திரும்புவது வழக்கம். பறவை கள் சரணாலயமாக விளங்குவதால், ஏரியின் உள்ளே மரக்கன்றுகளை நடுவது பட்டுப்போன மரங்களை அகற்றி பறவைகள் மற்றும் பார்வை யாளர்களுக்கான அடிப்படை கட்ட மைப்புகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை வனத்துறை மேற்கொள் கிறது.

எனினும், ஏரியின் கரைகள், மதகு கள் போன்றவற்றை பராமரிக்கும் பணி பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரியின் மதகுகள் சேதமடைந்து நீர்க் கசிவு ஏற்பட்டு கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுகிறது. இதனால், ஏரியின் மதகுகளை சீரமைப் பதற்கு நிதி ஒதுக்குமாறு அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் பரிந் துரைக்கப்பட்டது.

எனினும், நிதி ஒதுக்கப்படாததால் சரணாலய ஏரியின் பாதுகாப்பு கருதி சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள அனுமதி கேட்டு பொதுப் பணித்துறையிடம் வனத்துறை கடிதம் அளித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு கனமழையின்போது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதில், மதகுகள் மேலும் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் ஏரியின் மதகை விரைந்து சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஏரியின் சீரமைப்புப் பணிகளை பொதுப்பணித் துறை மேற்பார்வையில் செய்யலாம் என வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேடந்தாங்கல் பகுதி விவசாயிகள் கூறியதாவது: வேடந்தாங்கல் ஏரி பறவைகளின் சரணாலயமாக கருதப்பட்டாலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத் தேவைக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. மதகின் தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. தற்போது சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள பொதுப்பணித்துறை அனு மதியளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, வேடந்தாங்கல் சரணாலய வனச்சரகர் சுப்பையா கூறியதாவது: பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளதால் வனத் துறையால் பணிகளை மேற்கொள்ள முடியாது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. மதகு சீரமைப்புப் பணிக்கான தொழில் நுட்பம் பொதுப்பணித் துறைக்கு தான் தெரியும். அதனால், அவர் களின் மேற்பார்வையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சீரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்குமாறு அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளோம். மதகு பகுதியில் சேதம் ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளால் தடுப்பு அமைத்துள்ளோம். பருவமழையின் போது அதிகளவு நீர் வரத்து இருந் தால், பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயாராக வைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

வேடந்தாங்கல் ஏரியின் மதகு பகுதியில் மணல் மூட்டைகளால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்