திருவண்ணாமலை: மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனிடையே உணவு தயாரிக்கும்போது அலட்சியமாக இருந்ததால் சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் பல்கீத் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவை, 47 மாணவர்கள் சாப் பிட்டுள்ளனர். இவர்களில், 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும், ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 6 பேருக்கு பாதிப்பு அதிகளவில் இருந்ததால், அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ரெட்டியார் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர் இல்லாததால், தானிப்பாடி சாலையில் மாணவர்களின் பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மறியல் முடிவுக்கு வந்தது. பின்னர், மருத்துவர்களை வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆட்சியர் ஆறுதல்
இந்நிலையில் ரெட்டியார்பாளை யம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உணவு தயாரிக்கும்போது அலட்சியமாக இருந்ததால் சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் பல்கீத் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago