சேதமடைந்த மின் உபகரணங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சேதமடைந்த மின் உபகரணங்கள் குறித்து தெரியவந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் (அண்ணாநகர்) ஏ.சக்திவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் மழைக்காலத்தில் மின்கசிவு, மின்கம்பிகளில் தீப்பற்றுதல், மின்கடத்தி மற்றும் மின் கம்பங்களில் பழுது, மின் உபகரணங்களில் மரம் சாய்ந்து விழுதல் போன்றவை பொது இடத்திலோ உங்கள் வீடுகளிலோ நிகழ்ந்தால் உடனடியாக அருகில் உள்ளமின்வாரிய உதவி பொறியாளரையோ, உதவி செயற்பொறியாளரையோ அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற நேரங்களில் மின்வாரிய தலைமையகத்தில் உள்ள மின்னகத்தை 94987 94987 என்ற 24 மணி நேர உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அண்ணா நகரைப் பொருத்தவரை இந்த தகவல்களைத் தெரிவிக்க பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கான தொடர்பு எண்கள் மூலம் மின் உபகரண சேதம்குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாநகர் மின்வாரிய அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் மின் உபகரண சேதம் குறித்து தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்கள்:

அண்ணாநகர் மேற்கு, திருவல்லீஸ்வரர் நகர் - 94458 50376, அண்ணாநகர் மத்தி, வடக்கு - 94458 50378, 379, சாந்தி காலனி - 94450 71488, செனாய் நகர் - 94458 50380, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, எஸ்ஏஎப் கேம்ஸ் வில்லேஜ் (கோயம்பேடு) - 94458 50381, நெற்குன்றம் கிழக்கு (கோயம்பேடு சந்தை) - 94458 50385, நெற்குன்றம் மேற்கு - 94458 50384, மகாலிங்கபுரம், சேத்துப்பட்டு, அமைந்தகரை - 94458 50389, மதுரவாயல் வடக்கு - 94458 50386, மதுரவாயல் தெற்கு - 96770 44662, ஆலப்பாக்கம் - 94983 46011,போரூர் தோட்டம் - 99404 10720.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்