தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் தொடர்ச்சியாக கட்சி மாறி வரும் சூழலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நவம்பர் மாதம்முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி, தமாகாவுடன் இணைந்து தேமுதிக சந்தித்தது. மக்கள் நலக் கூட்டணி யோடு இணைந்ததை கண்டித்து சுமார் 18 மாவட்டச் செயலாளர்கள், தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு கட்சிகளில் இணைந்தனர்.
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்க தேமுதிக முடிவு செய்தது. இதைக் கண்டித்து நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் தேமுதிக செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமாகினர். 52 மாவட்டச் செயலாளர் களில் 24 பேர் தற்போது திமுக, அதிமுகவில் தங்களது ஆதரவாளர்களுடன் இணைந் துள்ளனர்.
இந்நிலையில் தேமுதிகவை வலுப்படுத் தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பாக தேமுதிக மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தேமுதிகவில் இருந்து பல மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து விலகியுள்ள சூழலில் உடனுக்குடன் அந்தந்த மாவட்டங் களுக்கான பொறுப்பாளர்களை விஜய காந்த் அறிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக நியமிக்கப் பட்ட மேற்பார்வையாளர்கள் குழுவிடம் கட்சியின் தற்போதைய நிலை குறித்து நாளை தொடங்கி வரும் சனிக்கிழமை வரை விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு முறை, தொண்டர்களின் ஆர்வம் உள்ளிட்டவற்றை கேட்டறியவுள்ளார். ஏற்கெனவே, நடத் தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் பலர் கட்சியை விட்டு விலகியுள்ள நிலையில், தேமுதிகவை தொடங்கியபோது செய் ததைப் போலவே, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், விஜயகாந்த் தனது மாவட்டவாரியான சுற்றுப் பயணத்தை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகளை தொடங்குவதற்காகத்தான் மாவட்டச் செயலாளர்கள் இல்லாத 18 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago