சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை கன்னியாகுமரியில் இன்று (செப்.7) மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்வர் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி சென்று, அங்கு இரவு தங்குகிறார். வரும் 8-ம் தேதி திருநெல்வேலி ஹைகிரவுண்டு பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து விருதுநகர் சென்று, திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார், பின்னர் மதுரைக்குச் செல்கிறார்.
மதுரையில் இரவு தங்கும் ஸ்டாலின் வரும் 9-ம் தேதி காலை, அமைச்சர் பி.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, அருகில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தைப் பார்வையிடுகிறார். அன்று இரவு முதல்வர் சென்னை திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago